பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

விளையாட்டுப் போட்டிகளில் யோகா சேர்ப்பு: மத்திய அமைச்சகம் ஒப்புதல்

யோகாவை ஒரு போட்டியாக அங்கீகரித்து கெலோ இந்திய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்க ஆயுஷ் மற்றும் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

கோப்புப்படம்

Published On :

யோகாவை ஒரு போட்டியாக அங்கீகரித்து கெலோ இந்திய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்க ஆயுஷ் மற்றும் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

கடந்த நான்கு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பின்னர் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார். 

யோகாசனம் என்பது யோகாவின் ஒருங்கிணைந்த மற்றும் முக்கியமான அங்கம் என்றும் இது உடல், மன ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் தெரிவித்தார். 

மேலும் யோகாவை தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்ப்பதன் மூலம் இளைஞர்கள் பயன்பெறுவர் என்றும் அனைவருக்குமே ஒரு நிறைவான வாழ்க்கையைப் பெற யோகா உதவுகிறது என்றும் தெரிவித்தார். 

போட்டிகளில் யோகா சேர்ப்பு, உலகெங்கிலும் உள்ள மக்களிடையே யோகா மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் என்று மத்திய விளையாட்டு அமைச்சர் கிரென் ரிஜுஜு தெரிவித்தார். 

ஆனால் எந்தவொரு விளையாட்டின் நோக்கமும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான். எனவே, இது ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பம் என்று குறிப்பிட்டார். 

யோகாசனம் 4 நிலைகளில் 51 பதக்கங்களையும், 7 நிலைகளையும் கொண்டதாக இருக்கும் என்றும் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும்  முன்மொழியப்பட்ட யோகா போட்டியில் பாரம்பரிய யோகாசனம், கலை யோகாசனம் (ஒற்றை), கலை யோகாசனம் (இரட்டையர்), தாள யோகாசனம் (இரட்டையர்), குழு யோகாசனா, சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகியவை அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.