உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகாது? காரணம் என்ன?

ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகுமா? ஆகாதா? என்பது குறித்து...

News image

ஐகியூ 16 - படம் / நன்றி - ஐகியூ

Updated On :6 ஜூலை 2026, 6:39 pm IST

ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளதாக நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக தயாரிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் அடுத்த ஆண்டு வெளியாகலாம் எனவும் தகவல் தெரிகிறது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐக்யூ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

இதனிடையே சமீபத்தில் அறிமுகமான ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் என பயனர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலான செய்தி வெளியாகியுள்ளது.

உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக, குறிப்பாக நினைவக அட்டைகள் விலை உயர்வால், ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் தயாரிப்பு எண்ணிக்கையை குறைக்க ஐக்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால், இந்தியாவில் ஐக்யூ 16 வெளியாகாது எனக் கூறப்படுகிறது.

பட்ஜெட் விலையில் உருவாகும் ஸீ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மட்டுமே வெளியிட ஐக்யூ திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகள் வெளியாகாது எனத் தெரிகிறது.

புராசஸர்களுக்கு புகழ் பெற்ற நிறுவனம்

2020 ஆம் ஆண்டு ஐக்யூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் தனித்துவமான அம்சங்கள் மூலம் குறுகிய காலத்தில் இந்திய பயனர்களிடையே ஐக்யூ தயாரிப்புகள் பிரபலமடைந்தன.

வேகமான சார்ஜர், ஃபிளாக்‌ஷிப் புராசஸர், கேம்களை மையப்படுத்திய அம்சங்கள் போன்றவை ஐக்யூ புகழ் பெறக் காரணமாக இருந்தன. இதனால் கேம் பிரியர்கள் பலரின் விருப்பத் தேர்வாக ஐக்யூ ஸ்மார்ட்போன் உள்ளது.

2025 நவம்பரில் வெளியான ஐக்யூ 15 விலை ரூ. 72,999. இது இதற்கு முன்பு வெளியான ஐக்யூ 13 ஸ்மார்ட்போனை விட விலை (ரூ. 54,999) அதிகமாகும்.

புதிதாக வெளியாகவுள்ள ஸ்மார்ட்போனில் 7,000mAh பேட்டரி, ஸ்நாப்டிராகன் 8 எலைட் 5 ஆம் தலைமுறை சிப்செட், அமோலிட் தொடுதிரை போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Summary

iQOO 16 may not launch in India as rising component costs hit smartphone plans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.