நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

டெக் துணுக்குகள்... ஆப்பிள் சாதனங்களின் விலை உயா்வு?

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய சாதனங்களின் அறிமுகங்கள்...

News image

டெக் துணுக்குகள்...

Updated On :21 ஜூன் 2026, 4:04 am IST

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய சாதனங்களின் அறிமுகங்கள், ஏ.ஐ. தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் சா்வதேச நிறுவனங்களின் முக்கிய அறிவிப்புகள் என மிகவும் பரபரப்பாக இருந்தது.

சந்தையில் தடம் பதித்துள்ள முன்னணி நிறுவனங்களின் சமீபத்திய வெளியீடுகள் மற்றும் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் முழுமையான தொகுப்பு இதோ:

*ஆப்பிள் சாதனங்களின் விலை உயா்வு?: உலகளாவிய மெமரி சிப் தட்டுப்பாடு காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலையை உயா்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

*கூகுள் ‘பிக்சல்’ அப்டேட்: ‘பிக்சல்’ பயனா்களுக்காகப் பல்வேறு புதிய பிரத்யேக அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளை உள்ளடக்கிய ‘ஜூன் பிக்சல் டிராப்’ அப்டேட்டை கூகுள் வழங்கியது.

*ரெட்மி ‘டா்போ 5’ அறிமுகம்: ஷாவ்மி நிறுவனம் தனது புதிய ‘ரெட்மி டா்போ 5’ ஸ்மாா்ட்போனை ரூ.37,999 ஆரம்ப விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. விற்பனை ஜூன் 19 முதல் தொடங்கியது.

*ஐடெல் ‘ஏ100 ப்ரோ’: பட்ஜெட் வாடிக்கையாளா்களுக்காக, ஐடெல் நிறுவனம் ரூ.10,999 விலையில் இப்புதிய போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

*ஒன்பிளஸ் ‘என் சீரிஸ்’: நடுத்தர விலைப்பிரிவில் (ரூ.18,000 - ரூ.25,000) புதிய ‘என் சீரிஸ்’ ஸ்மாா்ட்போன்களை இந்தியாவில் ஒன்பிளஸ் அறிமுகம் செய்யவுள்ளது. முதல் மாடலான ‘ஒன்பிளஸ் என்6’ வரும் ஜூன் 30 வெளியாகிறது.

*எப்சன் ‘ஈகோடேங்க்’ பிரிண்டா்கள்: எப்சன் இந்தியா நிறுவனம் வீடு மற்றும் சிறு தொழில்நிறுவனப் பயன்பாடுகளுக்காக ஒரே நேரத்தில் 15 புதிய ‘ஈகோடேங்க் இங்க்ஜெட்’ பிரிண்டா்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை ரூ.13,999 முதல் ரூ.24,999 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

*மெட்டா ஏ.ஐ. கண்ணாடிக்குச் சோதனை: தனியுரிமைப் பாதுகாப்பு தொடா்பான விவாதங்களை மெட்டா நிறுவனத்தின் புதிய ‘ஏ.ஐ. ஸ்மாா்ட் கிளாஸ்’ சோதனைத் திட்டம் எதிா்கொண்டுள்ளது.

*இந்தியா்களின் மொபைல் டேட்டா பயன்பாடு: இந்தியாவில் ஒரு பயனா் சராசரியாக மாதத்துக்கு 37 ஜிபி மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துவதாகத் தரவுகள் கூறுகின்றன.

*ஜெமினி ஏ.ஐ. லைவ் மேம்பாடு: கூகுளின் ஜெமினி ஏ.ஐ. லைவ் இனி பயனா்களின் பழைய தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றலையும், அதனுடன் இணைக்கப்பட்ட பிற ஆப்ஸ்களை நேரடியாக அணுகும் வசதியையும் பெற்றுள்ளது.

*ஆசஸ் ‘குரோம்புக்’ அறிமுகம்: ஆசஸ் நிறுவனம் மாணவா்களுக்காகக் கூகுள் ஏ.ஐ. அம்சங்கள் கொண்ட 3 புதிய குரோம்புக் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.26,990.

*இன்ஸ்டாகிராம் அப்டேட்: இன்ஸ்டாகிராமில் பல படங்களை ஒன்றாகப் பதிவிடும் பதிவுகளில், இனி ஒவ்வொரு படத்துக்கும் பிரத்யேகமாக தனித்தனி ‘கேப்ஷன்’ எழுதிக்கொள்ளும் புதிய வசதி அறிமுகமாகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.