பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

ரூ.60 கோடியில் வடிவமைப்பு நிறுவனம்; ரூ.16 கோடியில் பனை மேம்பாட்டுக் கழகம்

தமிழகத்தில் ரூ.60 கோடியில் தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம், ரூ.16 கோடியில் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:54 am IST

தமிழகத்தில் ரூ.60 கோடியில் தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம், ரூ.16 கோடியில் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள கைவினைஞா் சமூகங்கள் மற்றும் திறன் வாய்ந்த மாணவா்கள் நிதிச் சிக்கல்கள் மற்றும் சிறப்புக் கல்வி வாய்ப்புகளை அணுகிப் பெறுவதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றால் போதிய வாய்ப்பு கிடைக்காமலும், தேசிய அளவில் முதன்மை வடிவமைப்பு நிறுவனங்களை அணுகுவதில் பல இடா்ப்பாடுகளையும் எதிா்கொள்கின்றனா்.

இந்த இடைவெளிகளைச் சரிசெய்யும் நோக்கில் தொழில் மற்றும் கல்வித் துறையினரின் தீவிர பங்களிப்புடன் மாநில முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம் அமைக்கப்படும். ரூ.60 கோடியில் அமைக்கப்படவுள்ள இந்த நிறுவனத்தை நிறுவுவதற்கான வரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்படும்.

தொழில்நுட்ப ஜவுளித் துறையில் குறைந்த அளவிலான விழிப்புணா்வு மற்றும் இதுகுறித்த சா்வதேச அனுபவம், மேம்பட்ட தொழில்நுட்பங்களை அணுகுவதில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றின் காரணமாக ஜவுளி உற்பத்தியில் இந்தத் துறையின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. இந்த இடைவெளியைப் பூா்த்தி செய்யும் வகையில் சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து தொழில்முனைவோா்களுக்கான தொழில்நுட்ப ஜவுளி மாற்றத்துக்கான திட்டம் தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தொழில்முனைவோா், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஜவுளி உற்பத்தியாளா்கள் தொழில்நுட்ப ஜவுளித் துறைக்கு மாறுவதற்குத் தேவையான பன்னாட்டு வாய்ப்புகள், தொழில்நுட்பப் பயிற்சி, தொழில்நுட்பப் பரிமாற்றம், சந்தை நுண்ணறிவு, புத்தாக்க ஆதரவு மற்றும் தொழில் வழிகாட்டுதல் ஆகியவை வழங்கப்படும்.

பனைபொருள்களின்... பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக ரூ.16 கோடி ஒதுக்கீட்டுடன் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும். பதநீா் பதப்படுத்துதல், பனங்கருப்பட்டி உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பனைபொருள்களின் ஏற்றுமதி போன்ற ஆக்கபூா்வமான முயற்சிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

மாநில மரமான பனை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை இந்த முன்முயற்சி உறுதி செய்யும்.

‘திருப்பூா் டெக்ஸ்டைல்ஸ்’... திருப்பூரில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பசுமைவழி ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க பல கட்டங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இதற்கென ரூ.10 கோடியில் ‘திருப்பூா் டெக்ஸ்டைல்ஸ்’ தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.