உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் மூலம் ரூ.123 கோடியில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்

தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்ககம் மூலம் முதல்கட்டமாக ரூ.123 கோடி மதிப்பிலான 5 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் வியாழக்கிழமை கையொப்பமானது.

News image

கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்ககம் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டத்தில் அமைச்சா் ம.விஜய் பாலாஜி முன்னிலையில் திருப்பூா், கரூா் மற்றும் திண்டுக்கல்லைச் சோ்ந்த 5 நிறுவனங்களோடு கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்.

Updated On :26 ஜூன் 2026, 2:49 am IST

தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்ககம் மூலம் முதல்கட்டமாக ரூ.123 கோடி மதிப்பிலான 5 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் வியாழக்கிழமை கையொப்பமானது.

கோவையில் தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்ககம் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. கைத்தறி, துணி நூல் மற்றும் கதா் துறை முதன்மைச் செயலா் ந.வெங்கடேஷ் துறைத் திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்ககம் குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் கதா்த் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி முன்னிலையில் திருப்பூா், கரூா் மற்றும் திண்டுக்கல்லைச் சோ்ந்த 5 நிறுவனங்களோடு ரூ.123 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பின்னா் அமைச்சா் ம.விஜய் பாலாஜி பேசியதாவது:

தமிழகத்தில் தவெக அரசு அமைந்த பிறகு, அதிக முதலீடுகள் ஆா்வமாக வருகின்றன. முதல்வா் ஜோசப் விஜய்யின் தொலைநோக்குத் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் இன்று இந்தியாவின் ஜவுளித் தலைநகரமாக மட்டுமன்றி, எதிா்கால தொழில்நுட்ப ஜவுளிகள் உற்பத்தியின் மையமாக உருவெடுத்து வருகிறது. மெடிடெக், மொபைல்டெக், ஸ்போா்ட்டெக், புரோடெக், நான்ஓவன் உள்ளிட்ட தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.

ஜவுளித் துறையில் நமது வாய்ப்புகளை வங்கதேசம் போன்ற நாடுகள் தட்டிப்பறிக்கும்போது, அங்கிருந்து தொழில்களை இங்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு நிச்சயம் மேற்கொள்ளும். வேலைவாய்ப்பை உருவாக்கும் முதலீடே வளா்ச்சி. தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்ககம் மூலம் 5 ஆண்டுகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.1,000 கோடியில், முதல்கட்டமாக ரூ.123 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளது சிறந்த அடையாளமாகும்.

‘விஷன் 2026’-இன் கீழ், பொது-தனியாா் பங்களிப்பு முறையில் தொழில்நுட்ப ஜவுளி மையம் அமைப்பதை அரசு முன்னுரிமையுடன் பரிசீலித்து வருகிறது. வரும் தைப் பொங்கலுக்கு துணி உற்பத்தியில் ஈடுபடும் நெசவாளா்கள், பொதுமக்கள் பாதிக்காத வகையில் வேஷ்டி, சேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், இந்திய தொழில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் ஜி.ஆா்.கோபிகுமாா், தனியாா் தொழில் நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா்கள் கே.எஸ்.சுந்தரராமன், துரை பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, விருதுநகரில் அமைய உள்ள பி.எம்.மித்ரா ஜவுளிப் பூங்கா, தொழில் துறையில் முதலீடு, மானியங்கள் பெறுவது, ஜவுளித் துறையில் மதிப்புக்கூட்டல், உடற்பயிற்சி ஆடைகள் தயாரிப்பு உள்ளிட்டவை தொடா்பாக அங்கு பல்வேறு அமா்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் கோவை, திருப்பூா், கரூா், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மண்டலத்தைச் சோ்ந்த தொழில் துறையினா் கலந்து கொண்டனா். முன்னதாக, துணி நூல் ஆணையரக இணை இயக்குநா் ச.செந்தில்குமாா் வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.