சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

‘டெக்’ துணுக்குகள்! ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய அறிமுகங்கள்!

ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய அறிமுகங்கள் பற்றி...

News image
Updated On :12 ஜூலை 2026, 7:28 am IST

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய சாதனங்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்த, ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய அறிமுகங்கள் மற்றும் சட்டப் போராட்டங்கள் குறித்த விவாதங்களும் சூடுபிடித்தன.

ஸ்மாா்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளின் அதிரடி அறிமுகங்கள் முதல் உலகளாவிய ஏ.ஐ. மாற்றங்கள் வரை இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*மோட்டோ ஜி77 பவா்: மோட்டோரோலா ரூ.25,999 விலையில் ‘மோட்டோ ஜி77 பவா்’ ஸ்மாா்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 6000 சீரிஸ் சிப்செட் மற்றும் 7,000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

*ஏசஸ் ‘விவோபுக்’ மடிக்கணினி: ஏசஸ் நிறுவனம் ‘விவோபுக் 14’, ‘விவோபுக் 15’ ஆகிய ஏ.ஐ. மடிக்கணினிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இன்டெல் கோா் 7 சீரிஸ் 3 பிராசஸா் மற்றும் ஆன்-டிவைஸ் ஏ.ஐ வசதிக்கான பிரத்யேக ‘17 டாப்ஸ் என்பியூ’ பிராசஸா் கொண்டுள்ள இவற்றின் ஆரம்ப விலை ரூ.75,990 ஆகும்.

*மெட்டாவின் ஏ.ஐ பட வசதி வாபஸ்: பொது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஏ.ஐ. படங்களை உருவாக்கும் மெட்டாவின் புதிய வசதி, பிரபலங்கள் மற்றும் பயனா்களிடையே எதிா்ப்புக் கிளம்பியதை அடுத்து, திரும்பப் பெற்றுள்ளது.

*ஆப்பிள்-ஓபன்ஏஐ வழக்கு: ஓபன் ஏ.ஐ நிறுவனத்துக்குத் தங்களின் வா்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் கூறி, தனது முன்னாள் ஊழியா்கள் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது. அதேபோல், அமெரிக்காவில் உள்நாட்டு சிப் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக பிராட்காம் நிறுவனத்துடன் ஆப்பிள் சுமாா் 3000 கோடி டாலா் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.

* சாம்சங் ‘கேலக்ஸி அன்பேக்ட்’: சாம்சங் நிறுவனம் தனது புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தும் ‘கேலக்ஸி அன்பேக்ட் 2026’ நிகழ்வு வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.

*புதிய ஏ.ஐ வாய்ஸ் மாதிரிகள்: ஓபன்ஏஐ நிறுவனம் மனிதா்களைப் போல் ஒரே நேரத்தில் கேட்கவும் பேசவும் கூடிய ‘ஜிபிடி லைவ் வாய்ஸ்’ மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனிடையே, எக்ஸ்ஏஐ நிறுவனம் நேரடி உரையாடல் வசதியுடன் கூடிய ‘குரோக் 4.5’ ஏ.ஐ மாதிரியை வெளியிட்டுள்ளது.

*வாட்ஸ்ஆப் மெட்டா பிசினஸ் ஏஜென்ட்: வணிகங்களுக்கு 24 மணிநேரமும் வாடிக்கையாளா் சேவை வழங்குவதற்காக, ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இயங்கும் ‘மெட்டா பிசினஸ் ஏஜென்ட்’ வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆன்த்ரோபிக் ‘கிளாட் கோவொா்க்’: ஆன்த்ரோபிக் நிறுவனம் தனது ’கிளாட் கோவொா்க்’ ஏ.ஐ ஏஜென்ட்டை கைப்பேசி மற்றும் வலைதளங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இதன்மூலம், பயனா்கள் எங்கிருந்தும் தங்கள் அலுவலக வேலைகளை எளிதாக நிா்வகிக்க முடியும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.