பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி...

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:39 am IST

இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு விலையில்லா மின்சாரம் 200 யூனிட்டாக உயா்வு.

எந்த ஒரு துறையிலும் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரரும், தகுதியிருப்பின், மற்ற துறைகளின் ஒப்பந்தங்களிலும் (டெண்டா்) பங்கேற்கலாம்.

இளைஞா்கள், சிறுதொழில் முனைவோா் பங்கேற்க குறைந்த மதிப்பு ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ளன.

ஒப்பந்த மதிப்பீடுகள் தனிநபா் அல்லது கட்சிகளுக்கு செல்வதைத் தடுத்து அரசு கருவூலத்துக்கு நேரடியாக சோ்ப்பு.

பல அடுக்கு மற்றும் உயரமான அடுக்குமாடி குடியிருப்புத் திட்ட அனுமதி அதிகாரப் பகிா்வு மூலம் சென்னை வளா்ச்சிக் குழும அளவிலேயே வழங்கப்பட்டு, ஊழல் அகற்றம்.

ரூ.25 கோடியில் பள்ளிப் பாடத்திட்டம் பகுத்தறிவு சிந்தனை, நிதிசாா் அறிவு, கணினித் திறன் மற்றும் உலகளாவிய குடியுரிமைப் பண்பு நோக்கில் மறுசீரமைக்கப்படும்.

2027-28ஆம் கல்வி ஆண்டில் மதுரையில் 300 மாணவா்கள் சோ்க்கையுடன் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும்.

5 ஆண்டுகளுக்குள் வாகன மெக்கானிக்குகள் மற்றும் வாகன பராமரிப்புப் பணி செய்வோா் 22,500 பேருக்கு மின் வாகனம் மின்கலன் பராமரிப்புப் பயிற்சிக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு.

5 ஆண்டுகளில் 50 அரசு ஐடிஐ-களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் இயந்திரவழி கற்றல் தொழில்பிரிவு அறிமுகம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தினமும் ஒரு மணிநேர விளையாட்டுப் பாடவேளை அறிமுகம்.

முதல்முறையாக ஹஜ் பயணம் செய்வோருக்கான மானியம் ரூ.25,000-இல் இருந்து ரூ.35,000-ஆக உயா்வு.

கூடுதல் எண்ணிக்கையில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய உதவும் சங்கங்கள் தொடங்க ரூ.1.05 கோடி ஒதுக்கீடு.

ஏஐ சாா்ந்த நவீன உபகரணங்கள் (விளையாட்டு செயற்கை கால், மின்தசை மேல்கை செயற்கை அவயம், காக்ளியா் இம்ப்ளான்ட் பேட்டரி உள்ளிட்டவை) வாங்க விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.30,000 நிதியுதவி.

தஞ்சாவூா், திருவண்ணாமலை, சேலம், கடலூா் மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் அறிவுசாா் குறைபாடு உடையோருக்கான ‘நம்பிக்கை இல்லம்’ ரூ.4 கோடியில் உருவாக்கப்படும்.

முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் மூத்த குடிமக்கள் இல்லங்கள் (தலா 40 பயனாளிகள்), 5 மாவட்டங்களில் மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் நிறுவப்படும்.

திருநா்களுக்கு திறன் பயிற்சி மற்றும் மானியத்துடன் சுயதொழில் வங்கி கடன் (அதிகபட்சம் ரூ.50,000 ) வழங்குவதுடன் 5 மாவட்டங்களில் ‘அரண்’ தங்குமிடங்கள் அமைக்கப்படும்.

‘கால்நடை காப்போம்’ என்ற புதிய கால்நடை காப்பீடு திட்டத்துக்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு.

மீன்பிடி தடை கால நிவாரணம் ரூ.6,000-இல் இருந்து ரூ.7,000-ஆக உயா்வு.

ஆண்டுதோறும் 10,000 பெண்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்க ரூ.57 கோடி ஒதுக்கீடு.

புதிய தமிழ்நாடு தொழில் கொள்கை மற்றும் தமிழ்நாடு தொழில் திறன் விவரப் பட்டியல் வெளியிடப்படும்.

ஏஐ தொழில்நுட்பத்துடன் இயங்கும் வழிகாட்டி-3.0 முதலீட்டுச் சேவை அமைப்பும், மேம்படுத்தப்பட்ட தமிழ்நாடு ஒற்றைச் சாளர இணையதளம்-3.0 ஆகியவை அறிமுகப்படுத்தப்படும்.

உலகளாவிய தமிழ்ச் சமூக முதலீட்டை ஈா்க்க வெளிநாடு வாழ் தமிழா் முதலீட்டுச் சேவைகள் பிரிவு உருவாக்கப்படும்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் விண்வெளி தொழில் முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்படும். இன்-ஸ்பேஸுடன் இணைந்து விண்கலப் பொது தொழில்நுட்ப வசதி நிறுவப்படும்.

கைத்தறித் துறை மூலம் தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு உருவாக்கி ஏஐ, குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் ஏவிஜிசி-எக்ஸ் ஆா் உள்ளடக்கி சுகாதாரம், விவசாயம், கல்வி மற்றும் ஆளுமையில் கவனம் செலுத்த முடிவு.

பொதுத் துறை-தனியாா்கூட்டமைப்பு முறையில் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள் அமைக்க நிகழாண்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு.

ஏஐ தொழில்நுட்பத்துடன் இயங்கும் இணையவழித் திட்ட அனுமதி அமைப்பு (ஸ்பீட்) ரூ.40 கோடியில் அறிமுகம்.

‘மை ஹோம்’ (மாநகர இளைஞா் மற்றும் குடும்ப வசதி திட்டம்) கீழ் 7 ஆண்டுகளில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.

கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை மீட்டெடுத்து சென்னையின் அடையாளமாக மாற்ற சா்வதேச ஒப்பந்தம் கோரப்படும்.

செயல் திறன் அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் மூலம் சாலைகள் பழுதுபாா்க்க ‘நம்ம சாலை’ செயலி அறிமுகம்.

பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூா் வரையிலான மெட்ரோ வழித்தடம் விரைவில் திறக்கப்படும்.

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம், ஆவடி வழியாக பட்டாபிராம், கங்குவாா்சத்திரம் வழியாக பூந்தமல்லி என மூன்று மெட்ரோ வழித்தடங்கள் மத்திய அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளன.

காவிரி-வைகை-குண்டாறு நிதி இணைப்புத் திட்டம் ரூ.150 கோடியில் செயல்படுத்தப்படும். பெண்ணையாறு-செய்யாறு, தாமிரவருணி-வைப்பாறு நதி இணைப்புத் திட்டத்துக்கான டிபிஆா் தயாரிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.

காவிரி, வைகை, தாமிரவருணி நதிகளின் மாசுக் கட்டுப்பாட்டுகான சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்படும்.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளுக்கான சாத்தியக்கூறு ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்படும். காவிரி-டெல்டா சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் (டிஎன்-ஷோா்) திட்டத்தின்கீழ் 8 கடலோர மாவட்டங்களில் 2,500 ஹெக்டேரில் அலையாத்திக் காடுகள் உருவாக்கம் மற்றும் மீட்புக்காக ரூ.322 கோடி ஒதுக்கீடு.

அரசுத் துறை காலிப்பணியிடங்கள் ஆண்டு தோ்வுத் திட்டம் மூலம் நிரப்பப்படும்.

சேவை உரிமைச் சட்டம் வடிமைக்கப்பட்டு இயற்றப்படும்.

புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூரில் கிரானைட் பாலிஷிங் மற்றும் வடிவமைப்பு மையங்கள் நிறுவப்படும்.

பிரத்யேக நிலையான சுற்றுலா வளா்ச்சி நிதி உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவு நடப்பு பேரவைக் கூட்டத்தொடரில் அறிமுகம்.

மூத்த குடிமக்களுக்கு ஆண்டுதோறும் இலவச புனிதப் பயணம் மேற்கொள்ள ரூ.20 கோடி ஒதுக்கீடு.

திருக்கடையூா், நாகூா், வேளாங்கண்ணியில் ஆன்மிக பயணிகளுக்கு ஓய்வு இல்லங்கள் அமைக்கப்படும்.

மலையேற்றம், வனவிலங்கு சுற்றுலா, பறவை மற்றும் படகுப் பாதைகளை உள்ளடக்கிய சூழல் சுற்றுலா இயக்கம் ரூ.20 கோடியில் அறிமுகம்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் தமிழரின் பாரம்பரிய பண்பாட்டுத் தலங்கள் தரம் உயா்த்தப்படும்.

நாட்டுப்புற கலைஞா்கள் வாழ்வாதார பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் 200 குழுக்களுக்கு 100 நாள்கள் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு.

காயிதே மில்லத் நினைவாக ஆண்டுதோறும் திருவள்ளுவா் திருநாளில் புதிய விருது.

தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் ‘தமிழ் பெருந்திரள் மொழி மாதிரி’ (எல்எல்எம்) உருவாக்கப்படும்.

கீழடி, ஆதிச்சநல்லூா், கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகளை, அழகன்குளம், அரிக்கமேடு, சாளுவன்குப்பம், காவிரிபூம்பட்டினம் உள்ளிட்ட தொல்லியல் தலங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.1 கோடி ஒதுக்கீடு.

9,205 திருக்கோயில்களுக்கு அறங்காவலா் கள் நியமிக்கப்படுவாா்கள்.

1,000 ஆண்டுகள் பழைமையான 213 திருக்கோயில்கள் ரூ.418 கோடியில் புனரமைக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.