பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

போதையில்லாத தமிழ்நாடு! ரூ. 70 கோடி நிதி ஒதுக்கீடு! மரிய வில்சன்!

போதையில்லா தமிழ்நாடு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பற்றி..

News image

மரிய வில்சன் - TNAssembly

Updated On :5 ஆகஸ்ட் 2026, 1:30 pm IST

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவது தவெக அரசின் இலக்கு என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் என். மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார்.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்துவதுடன், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

மாநிலத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக, மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அலகு வீதம் 37 அலகுகளும், நகர்ப்புறங்களில் 28 அலகுகளும் சேர்த்து மொத்தம் 65 போதைப்பொருள் தடுப்புப் பணிக்குழு அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருட்களின் கடத்தல், விற்பனை மற்றும் தவறான பயன்பாடு தொடர்பாக, நிதி சார்ந்த புலன் விசாரணைகள் மேற்கொள்வதோடு, சொத்துகளை முடக்குதல் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் இந்த அலகுகள் மேற்கொண்டு வருகிறது.

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உறுதிசெய்யும் நோக்கில், இந்த அரசு ஒரு மறுவாழ்வு நிதியை உருவாக்கும். இத்திட்டத்திற்காக  ரூ. 70 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

போதைப்பொருள் மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடவும், அதிலிருந்து மீண்டு வரவும், உதவி தேவைப்படும் நபர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காகவே இந்த நிதி முதன்மையாகப் பயன்படுத்தப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.