மோடியின் வாராணசி அலுவலகத்தை விற்பதாக இணையத்தில் அறிவித்த 4 பேர் கைது

பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாராணசியில் உள்ள அவரது அலுவலகத்தை ஓஎல் எக்ஸ் இணையதளத்தில் விற்பனைக்கு அறிவித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 
மோடியின் வாராணசி அலுவலகத்தை விற்பதாக இணையத்தில் அறிவித்த 4 பேர் கைது
மோடியின் வாராணசி அலுவலகத்தை விற்பதாக இணையத்தில் அறிவித்த 4 பேர் கைது
Updated on
1 min read

பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாராணசியில் உள்ள அவரது அலுவலகத்தை ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் விற்பனைக்கு அறிவித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

பிரதமர் மோடி கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாராணசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் வாராணசியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் பிரபல விற்பனை விளம்பர வலைத்தளமான  ஓஎல்எக்ஸில் பிரதமர் நரேந்திர மோடியின் வாராணசி அலுவலகம் விற்பனைக்கு உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 4 அறைகள் மற்றும் 4 குளியலறைகள் கொண்ட 6,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மோடியின் அலுவலகம்  ரூ.7.5 கோடிக்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி இந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அந்த விளம்பரத்தை நீக்கிய உத்தரப்பிரதேச காவல்துறையினர் அதனைப் பதிவிட்டதாக 4 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com