புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விவசாயிகளுக்கு ஆதரவாக காங். முதலைக் கண்ணீர்: சிவராஜ் சிங் செளகான்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்று காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிப்பதாக மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் விமர்சித்துள்ளார்.

News image

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் (கோப்புக்காட்சி)

Updated On :18 டிசம்பர் 2020, 9:52 am

DIN

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்று காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிப்பதாக மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் விமர்சித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் கிசான் கல்யான் என்னும் உழவர்கள் நலன்  நிகழ்ச்சியில் விவசாய சட்டங்கள் குறித்து விவசாயிகள் மத்தியில் முதல்வர் செளகான் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, ''பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் வகையில் வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். 

மண்டி முழுவதுமாக மூடப்படாது. விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பது போன்று காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிக்கிறது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாகக் கூறினார். ஆனால் இதுவரை தள்ளுபடி செய்யப்படவில்லை. கடன் தள்ளுபடி போலி சான்றிதழ்களை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கினார்'' என்று விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.