சோனியா காந்தி விவசாயியா?: ஸ்மிருதி இரானி

விவசாயம் பற்றி தெரியாத பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்த நிலையில், சோனியா காந்தி விவசாயியா என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி (கோப்புப்படம்)
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி (கோப்புப்படம்)
Updated on
1 min read

விவசாயம் பற்றி தெரியாத பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்த நிலையில்,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விவசாயியா என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், பிரதமர் மோடி தனது ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையாக 8 லட்சம் கோடி ரூபாயை வழங்கியுள்ளார்.

ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 10 ஆண்டுகால ஆட்சியில் 3.5 லட்சம் கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆளும் போது நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு என்ன செய்தது?.

விவசாயம் பற்றி தெரியாத பிரதமர் மோடி வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விவசாயியா? என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com