

லக்னெள: மத்திய அரசு உடனடியாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லெக்னெளவில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது, மத்திய அரசு கடுமையான அணுகுமுறையை கைவிட்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களைத் திருமப் பெற வேண்டும். இதுவே பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மத்திய அரசுக்கு வைக்கப்படும் கோரிக்கை.
கடந்த நவம்பர் 26-ஆம் தேதி முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகரான பல்வேறு எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 4-வது வாரமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.