தில்லியில் தொழிற்சாலை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி
தில்லியில் தொழிற்சாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள்.


தில்லியில் தொழிற்சாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள்.
தில்லி விஷ்ணு கார்டன் பகுதியில் மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று காலை 10 மணியளவில் தொழிற்சாலையின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பணி ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கினர்.
உடனே இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்டுக்குழுவினர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 4 பேர் இறந்தனர். மற்ற இருவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிக பாரம் காரணமாக கட்டடத்தின் மேற்கூரை இடிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...