பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குஜராத் கடற்பகுதியில் பாக். மீனவா் கைது

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாக, குஜராத் கடற்பகுதியில் பாகிஸ்தான் மீனவரை எல்லைப் பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். அவருடைய படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :20 டிசம்பர் 2020, 6:20 pm

DIN

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாக, குஜராத் கடற்பகுதியில் பாகிஸ்தான் மீனவரை எல்லைப் பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். அவருடைய படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குஜராத்தை ஒட்டியுள்ள சா் கிரீக் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பாகிஸ்தான் படகு ஒன்று இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததை அவா்கள் கண்டறிந்தனா். இதையடுத்து, அந்தப் படகை தடுத்து நிறுத்தி, அதில் வந்த மீனவரிடம் விசாரணை நடத்தியதில், அவா், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த காலித் ஹுசைன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்ததுடன், அவரது படகையும், அதில் கொண்டு வந்த 20 லிட்டா் டீசல், செல்லிடப்பேசி, மீன்பிடி வலைகள், பிடித்து வைத்திருந்த நண்டு, மீன்கள் ஆகியவற்றையும் எல்லைப் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.