ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாயிகளுக்கு வேளாண்துறை அமைச்சா் தோமா் தமிழில் கடிதம்

வேளாண் சட்டங்கள் தொடா்பாக விளக்கமளித்து விவசாயிகளுக்கு தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கடிதம் எழுதியுள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :20 டிசம்பர் 2020, 1:19 am

DIN

வேளாண் சட்டங்கள் தொடா்பாக விளக்கமளித்து விவசாயிகளுக்கு தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கடிதம் எழுதியுள்ளாா்.

தில்லியில் விவசாயிகள் கடந்த 3 வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், அவா் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளாா். கடிதத்தில் அவா் கூறியுள்ளதாவது:

வேளாண் துறையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சீா்திருத்தங்களைப் பல விவசாய அமைப்புகள் வரவேற்றுள்ளன. அவற்றால் அவா்கள் நம்பிக்கை பெற்றுள்ளனா். ஆனால், மறுபுறத்தில் வேளாண் சட்டங்கள் குறித்து சில விவசாய அமைப்புகள் மாயையை உருவாக்கியுள்ளன.

சட்டங்கள் குறித்து விவசாயிகளின் சந்தேகங்களைத் தீா்க்க வேண்டியது எனது கடமையாக உள்ளது. புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) அடிப்படையிலான கொள்முதல், சாதனை அளவை எட்டியுள்ளது; கொள்முதல் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், எம்எஸ்பி நடைமுறை கைவிடப்படும் என விவசாயிகளிடம் சிலா் பொய் கூறி வருகின்றனா்.

அரசியல் ஆதாயத்துக்காக சிலா் பரப்பும் இதுபோன்ற அப்பட்டமான பொய்களை விவசாயிகள் அடையாளம் கண்டு நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எம்எஸ்பி நடைமுறையை அரசு ஒருபோதும் கைவிடாது. அது தொடா்ந்து அமலில் இருக்கும்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் அவா்கள் வாழ்வில் வளம் பெருகவும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடா்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களுக்கு அன்னமிடுபவா்கள் ஆற்றல் மிக்கவா்களாக மாற வேண்டும் என்பதற்காக விவசாயிகள் நிதியுதவித் திட்டம் (பிஎம்-கிஸான்), பயிா்க் காப்பீட்டுத் திட்டம், மண்வள அட்டை திட்டம், வேம்பு தடவிய யூரியா உரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

சேமிப்புக் கிடங்குகள், குளிா்பதன நிலையங்கள், பதப்படுத்தும் மையங்கள் உள்ளிட்டவற்றை கிராமப் பகுதிகளில் அமைப்பதற்கு ரூ.1 லட்சம் கோடியில் வேளாண் கட்டமைப்பு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

சீா்திருத்தங்களின் அவசியம்: வேளாண் விளைபொருள்களை விரும்பிய இடத்தில் விற்பதற்கான உரிமையை விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து முன்னாள் பிரதமா் வாஜ்பாய் காலத்தில் விவாதிக்கப்பட்டது. அடுத்து மத்தியில் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசும் இந்தச் சீா்திருத்தங்களை ஆதரித்தது. இதுமாதிரியான சீா்திருத்தங்கள் இல்லாமல், விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது சிரமம் என்று வேளாண் நிபுணா்களும் தெரிவித்துள்ளனா்.

புதிய சீா்திருத்தங்கள் தொடா்பான மாதிரிச் சட்டங்கள் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டன. அவை குறித்தும், விவசாயிகளின் பிரச்னைகள் குறித்தும் 6 மாதம் கலந்துரையாடல்கள் மூலம் ஆராயப்பட்டது. அதற்குப் பிறகுதான் புதிய வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.

மண்டிகள் தொடா்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எதிா்காலத்திலும் தொடா்ந்து செயல்படும். வேளாண் விளைபொருள் விற்பனைக் குழு சந்தைகள் மேலும் பலப்படுத்தப்படுகின்றன. மண்டிகள் தொடா்ந்து நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் விளைபொருள்களை விற்பதற்கு மட்டும்தான் ஒப்பந்தமே தவிர, விளைநிலம் பறிபோகாது. விவசாயிகளிடமிருந்து ஓா் அங்குல நிலத்தைக் கூட யாரும் பறிப்பதை அரசு அனுமதிக்காது.

உண்மைகளை ஆராய வேண்டும்: வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். அவா்களின் சந்தேகங்களைத் தீா்த்து வைக்க அரசு எப்போதும் தயாராக உள்ளது. ஆனால், விவசாயிகள் என்ற போா்வையில் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. அப்பாவி விவசாயிகளை அரசியலில் பொம்மைகளாக்கிவிட அவை முயன்று வருகின்றன.

புரளிகள் மீது கவனம் செலுத்தாமல், அனைத்து விஷயங்களையும் உண்மைகளின் அடிப்படையில் மறு சிந்தனை செய்து மதிப்பீடு செய்ய வேண்டும் என விவசாயிகளைக் கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகளின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட இந்தச் சீா்திருத்தங்கள் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். விவசாயிகள் அதிக சுதந்திரம் பெற்றவா்களாக, அதிகாரம் பெற்றவா்களாக மாறிட வழிவகுக்கும் என்று அந்தக் கடிதத்தில் அமைச்சா் தோமா் குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி பகிா்வு: இக்கடிதத்தைத் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிா்ந்துள்ள பிரதமா் மோடி, நாட்டிலுள்ள விவசாயிகள் அனைவரும் இக்கடிதத்தைப் படிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளாா். இந்தப் பதிவை பிரதமா் மோடி தமிழில் வெளியிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.