அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தில்லியில் புதிதாக 1,091 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 1,091 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :20 டிசம்பர் 2020, 1:07 pm

DIN


தில்லியில் புதிதாக 1,091 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,275 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 26 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,17,005 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,96,580 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர், 10,277 பேர் பலியாகிவிட்டனர். 10,148 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

தில்லியில் இன்று 83,289 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் விகிதம் 1.31 சதவிகிதம். கடந்த 10 நாள்கள் தரவுகளின்படி இறப்பு விகிதம் 2.54 சதவிகிதமாக உள்ளது.

இதுவரை மொத்தம் 78,00,367 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.