

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் உரையாற்றுகிறார்.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் டிசம்பவர் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். மேலும் நிகழ்ச்சியின் போது ஒரு தபால் தலையையும் அவேர் வெளியிடுவார். பல்கலைக்கழகத்தின் வேந்தர் சையேத்னா முஃபதல் சைபுதீன் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ ஆகியோர் இதில் கலந்து பங்கேற்கிறார்கள்.
இந்திய மேலவைச் சட்டத்தின் கீழ் முகமது ஆங்கிலோ ஓரியண்டல் (எம்.ஏ.ஓ) கல்லூரியை மத்தியப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தியதையடுத்து, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், கடந்த 1920-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக மாறியது. எம்.ஏ.ஓ கல்லூரி, கடந்த 1877-ஆம் ஆண்டு சர் சையது அகமது கானால் நிறுவப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் அலிகர் நகரில் 467.6 ஹெக்டர் நிலப்பரப்பில் பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ளது.
மல்லபுரம் (கேரளா), முர்ஷிதாபாத் ஜங்கிபூர் (மேற்கு வங்காளம்) மற்றும் கிஷன்கஞ் (பிகார்) ஆகிய மூன்று நகரங்களிலும் இந்தப் பல்கலைக்கழகத்தின் மையங்கள் இயங்குகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.