உ.பி. மத்திய பாதுகாப்புப்படை வீரர் தூக்கிட்டுத் தற்கொலை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மத்திய பாதுகாப்புப் படை பிரிவை சேர்ந்த வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உ.பி. மத்திய பாதுகாப்புப்படை வீரர் தூக்கிட்டுத் தற்கொலை (கோப்புப்படம்)
உ.பி. மத்திய பாதுகாப்புப்படை வீரர் தூக்கிட்டுத் தற்கொலை (கோப்புப்படம்)
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மத்திய பாதுகாப்புப் படை பிரிவை சேர்ந்த வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புப்படை வீரரான ராஜீவ் என்பவர், விடுமுறையில் சொந்த ஊர் திரும்பினார்.

சொந்த ஊர் வந்து ஐந்து நாள்களான நிலையில், நேற்று (சனிக்கிழமை) மாலை மரத்தில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மத்திய பாதுகாப்புப் படைப் பிரிவை சேர்ந்த வீரரது உடலைக் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com