ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்தியாவில் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரிப்பு: மத்திய அரசு அறிக்கையில் தகவல்

இந்தியாவில் சிறுத்தைப் புலிகள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்திருப்பது மத்திய அரசின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

News image
இந்தியாவில் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரிப்பு: மத்திய அரசு அறிக்கையில் தகவல்
Updated On :22 டிசம்பர் 2020, 2:13 am

DIN

புது தில்லி: இந்தியாவில் சிறுத்தைப் புலிகள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்திருப்பது மத்திய அரசின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு 8,000-ஆக இருந்த இவற்றின் எண்ணிக்கை, இப்போது 12,852 என்ற அளவில் உயா்ந்துள்ளது.

‘இந்தியாவில் 2018-ஆம் ஆண்டு சிறுத்தைப் புலிகளின் நிலை’ என்ற தலைப்பிலான இந்த கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டாா்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னா் தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது;

இந்தியாவில் சிறுத்தைப் புலி எண்ணிக்கை கடந்த 2014-ஆம் ஆண்டு கணக்கெடுப்பைக் காட்டிலும் 60 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்திருக்கிறது.

மாநிலங்களைப் பொருத்தவரை 3,421 சிறுத்தைப் புலிகளுடன் மத்திய பிரதேசம் முதலிடத்திலும், கா்நாடகம் (1,783), மகாராஷ்டிரம் (1,690) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக புலி, சிங்கம், சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வன உயிரினம் மற்றும் பல்லுயிா் பெருக்கத்துக்கு சான்றாக அமைந்துள்ளது என்று சுட்டுரைப் பதிவில் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.