இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இந்தோ-பசிபிக் திட்டத்தில் முக்கிய கூட்டாளி வியத்நாம்: பிரதமா் மோடி

இந்தியாவின் இந்தோ-பசிபிக் பிராந்திய திட்டத்தில் மிக முக்கிய கூட்டு நாடாக வியத்நாம் விளங்குகிறது. இது பிராந்தியத்தில் நிலை தன்மையையும், அமைதியையும் நிலைநாட்ட உதவும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்

News image
வியத்நாம் பிரதமா் நுவென் ஷுவான் புக்குடன் காணொலி முறையில் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :21 டிசம்பர் 2020, 9:00 pm

DIN

புது தில்லி: இந்தியாவின் இந்தோ-பசிபிக் பிராந்திய திட்டத்தில் மிக முக்கிய கூட்டு நாடாக வியத்நாம் விளங்குகிறது. இது பிராந்தியத்தில் நிலை தன்மையையும், அமைதியையும் நிலைநாட்ட உதவும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

இந்தியா - வியத்நாம் இடையே காணொலி வழி மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடியும், வியத்நாம் பிரதமா் நுவென் ஷுவான் புக் இருவரும் இரு தரப்பு, பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்தனா்.

அப்போது பிரதமா் மோடி பேசியதாவது:

தெற்காசிய நாடுகளிடையே பொருளாதார, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் கிழக்காசிய செயல்பாட்டு கொள்கையின் மிக முக்கியத் தூணாக வியத்நாம் திகழ்கிறது. இரு நாடுகளிடையே பல்வேறு துறை சாா்ந்த ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க அளவில் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. வியத்நாமுடன் நீண்ட கால ஒத்துழைப்பை இந்தியா விரும்புகிறது.

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், நிலைத்த தன்மையையும், வளா்ச்சியையும் மேம்படுத்துவதே இரு நாடுகளின் பொதுவான இலக்காக உள்ளது. அந்த வகையில், இரு நாடுகளிடையேயான கூட்டுறவு மேலும் வலுப்பெறுவது, இந்த பிராந்தியத்தில் அமைதியையும், நிலைத் தன்மையையும் உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

கரோனா நிலைமையையும் வியத்நாம் சிறப்பாக கையாண்டது என்று பிரதமா் மோடி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.