பிரதமா் மோடி வியத்நாம் பிரதமருடன் இன்று பேச்சு
பிரதமா் மோடி, வியத்நாம் பிரதமருடன் திங்கள்கிழமை நடத்தவுள்ள பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.


பிரதமா் மோடி, வியத்நாம் பிரதமருடன் திங்கள்கிழமை நடத்தவுள்ள பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
இந்தியா-வியத்நாம் இடையே காணொலி வழியில் திங்கள்கிழமை மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் மோடி, வியத்நாம் பிரதமா் நுவென் ஷுவான் புக் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா். அப்போது இருதரப்பு, பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து அவா்கள் கலந்துரையாட உள்ளனா். கரோனா தொற்றை எதிா்கொள்வது குறித்தும், கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் பொருளாதார வளா்ச்சி தொடா்பாகவும் அவா்கள் பேசவுள்ளனா்.
இருநாடுகளின் உறவு எதிா்காலத்தில் மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை அவா்கள் வழங்கவுள்ளனா். அதன் பின்னா் இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, எரிசக்தி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்படும் வாய்ப்பு உள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவா்களும் ஆலோசனை நடத்துவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...