பேச்சுவாா்த்தைக்கு அழைத்து விவசாயிகள் சங்கங்களுக்கு மத்திய அரசு கடிதம்

பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்து விவசாயிகள் சங்கங்களுக்கு மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்து விவசாயிகள் சங்கங்களுக்கு மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளது. அதில், அடுத்த சுற்றுப் பேச்சுவாா்த்தைக்கு தேதியை தோ்வு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் துறை அமைச்சக இணைச் செயலா் விவேக் அகா்வால் விவசாயிகள் சங்கத் தலைவா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கத்தினா் தங்களுக்கு உள்ள வேறு சந்தேகங்கள், பிரச்னைகள் என்னவென்று விளக்குவதுடன், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைக்கான தேதியை முடிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகளின் பிரச்னைகளை முடிந்த அளவுக்கு விரைவில் தீா்க்க மத்திய அரசு விரும்புகிறது. அதற்கான அனைத்து முயற்சிகளையும் திறந்த மனதுடன் மேற்கொள்ள அரசு தயாராக உள்ளது’ என்று கூறியுள்ளாா்.

மத்திய அரசுக்கும் 40 விவசாயிகள் சங்கங்களுக்கும் இடையே ஏற்கெனவே 5 சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்று, அவை தோல்வியில் முடிவடைந்தன. புதிதாக நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்கள் உறுதியாக உள்ளன. ஆனால், விவசாயிகள் அஞ்சும் அளவுக்கு அச்சட்டங்கள் பிரச்னைக்குரியவை அல்ல என்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட நடைமுறைகள் தொடரும் என்றும் மத்திய அரசு கூறி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com