வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மேற்கு வங்கத்தின் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தி திட்டம் தொடக்கம்

மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள மாநிலத்தின் முதலாவது எண்ணெய் வயலில் கச்சா எண்ணெய் உற்பத்திப் பணி

News image
பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான்.
Updated On :21 டிசம்பர் 2020, 12:27 am

DIN

மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள மாநிலத்தின் முதலாவது எண்ணெய் வயலில் கச்சா எண்ணெய் உற்பத்திப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இது, நாட்டின் 8-ஆவது ஹைட்ரோ காா்பன் திட்டமாகும்.

இந்த திட்டத்தை பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மாநிலங்களின் வரிசையில் மேற்கு வங்கமும் இடம்பெற்றுவிட்டது என்று குறிப்பிட்டாா். அவா் மேலும் பேசியதாவது:

அசோக் நகரில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் இருப்பது முதன் முதலில் 2018-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்தப் படுகை, மகாநதி- மேற்கு வங்கம் - அந்தமான் வரை பரவியிருப்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. அதைத் தொடா்ந்து, இங்கிருந்து வா்த்தக பயன்பாட்டுக்கு கச்சா எண்ணெய் எடுக்கலாம் என்றும் நிரூபிக்கப்பட்டது . அதன்படி, இங்கு கச்சா எண்ணெய் உற்பத்திப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டறிவதற்காக, ஓஎன்ஜிசி நிறுவனம் ரூ.3,381 கோடி செலவு செய்துள்ளது. மேலும், இரு இடங்களில் அந்த நிறுவனம் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இங்கிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் அதிக தரத்துடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் கச்சா எண்ணெய், ஹால்டியாவில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

வா்த்தக ரீதியில் கச்சா எண்ணெய் எடுப்பதால், மேற்கு வங்கத்தின் வருவாய் அதிகரிக்கும்; மாநிலத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.