புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விவசாயிகளை மத்திய அரசு மதிக்கவில்லை: பினராயி விஜயன்

நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளை மத்திய அரசு மதிக்கவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

News image

முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)

Updated On :23 டிசம்பர் 2020, 8:24 am

DIN

நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளை மத்திய அரசு மதிக்கவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் விவசாயிகள் 28ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தில்லியில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதராகவும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. 

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் விவசாயிகள் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:

நம் நாடு பல வரலாற்று போராட்டங்களை கொண்டுள்ளது.  அவற்றில் மிகப் பெரிய போராட்டமாக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் மத்திய பாஜக  அரசு மதிக்கவில்லை. 

பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் (என்.சி.எஃப்) சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவதாக பாஜக கூறியது. அவ்வாறு கூறிய பாஜக தான் இப்போது நாட்டை ஆளுகிறது. ஆனால், தாங்கள் கூறியதை அமல்படுத்த முடியவில்லை. 

தேசிய விவசாயிகள் தினம் இன்று கொண்டாடப்படும் இந்நாளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.