மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

2022 பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை: கோவாவின் எம்.ஜி.பி. கட்சி

​2022 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என கோவாவின் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (எம்.ஜி.பி.) அறிவித்துள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 11:00 am


2022 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என கோவாவின் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (எம்.ஜி.பி.) அறிவித்துள்ளது.

இதுபற்றி எம்.ஜி.பி. கட்சியின் தலைவர் தீபக் தாவலிகர் புதன்கிழமை பேசியது:

"2022 பேரவைத் தேர்தலில் நாங்கள் நிறைய இடங்களில் போட்டியிட விரும்புகிறோம். பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். தனித்துப் போட்டியிடுவோம். எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தால் அவர்களுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து பரிசீலிப்போம். எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்தால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்படும்."

மகாராஷ்டிரவாதி கோம்ந்தக் கட்சி (எம்.ஜி.பி.) கோவாவின் பழைய பிராந்தியக் கட்சிகளில் ஒன்று. 2012 பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து மறைந்த மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசில் அங்கம் வகித்தது. 2017 பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியிலிருந்து எம்.ஜி.பி. வெளியேறியது. ஆனால், தேர்தல் முடிவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசில் அங்கம் வகித்தது.

பாரிக்கர் மறைவுக்குப் பிறகு, எம்.ஜி.பி. எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரில் இரண்டு பேர் பாஜகவில் ஐக்கியமாகினர். இதனால், மீண்டும் கூட்டணி முறிந்தது. பின்னர், எம்.ஜி.பி.யின் ஒரே எம்.எல்.ஏ.வும் துணை முதல்வருமான சுதின் தாவலிகரை அமைச்சரவையிலிருந்து நீக்கினார் புதிதாகத் தேர்வான முதல்வர் பிரமோத் சாவந்த். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.