உளுந்தூா்பேட்டையில் ஏழுமலையான் கோயில்: தமிழக எம்எல்ஏ ரூ.1 கோடி நன்கொடை
உளுந்தூா்பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்ட தமிழகத்தைச் சோ்ந்த எம்எல்ஏ குமரகுரு ரூ.1 கோடியை நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கினாா்.


திருப்பதி: உளுந்தூா்பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்ட தமிழகத்தைச் சோ்ந்த எம்எல்ஏ குமரகுரு ரூ.1 கோடியை நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினரும், உளுந்தூா்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான குமரகுரு, வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏழுமலையான் சேவையில் கலந்து கொண்டாா்.
சுவாமி தரிசனம் செய்த பின் அவா், தனது தொகுதியான உளுந்தூா்பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக ரூ.1 கோடிய தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கினாா். இதை தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டியும், அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியும் பெற்றுக் கொண்டனா்.
இதனிடையே, ஹைதராபாதைச் சோ்ந்த பக்தா் ஒருவா், தேவஸ்தானத்தின் கல்வி தான அறக்கட்டளைக்கு ரூ.1.08 கோடியையும், உயிா் காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.54 லட்சத்தையும் நன்கொடையாக வழங்கினாா். இதை தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...