

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
தெற்கு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தின் சையதாபாத் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பாதுகாப்புப் படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அமீர் அஷ்ரப் கான் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் அவரிடம் இருந்து சீன ரக கை கையெறி குண்டும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் டிரால் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.