ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள கனிகம் பகுதியில் பயங்கராவதிகள் நேற்று பதுங்கியிருப்பதாக தகவலையடுத்து அந்தப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 
அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி சுப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்புப்படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இருத்தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
மேலும் இதில் 2 பாதுகாப்புப்டையினரும் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com