'நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை'

உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Updated on
1 min read

உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஓராண்டில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சி செய்யும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்று விமர்சித்தார்.

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில் ஓராண்டில் மூன்று கட்ட பஞ்சாயத்து தேர்தலும் நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் மூலம் ஜம்மு-காஷ்மீரில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது 

ஜம்மு-காஷ்மீரில் படிப்படியாக அனைத்துக் கட்ட வளர்ச்சிப் பணிகளையும் மத்திய அரசு திறம்பட செயல்படுத்தும் என்று கூறினார்.

கடந்த முறை 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் எல்லையோர பகுதிகளின் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தவில்லை.

காங்கிரஸை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது என்று குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com