மோடி அரசால் அசாமில் அமைதி நிலவுகிறது: அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் எடுக்கப்பட்ட முயற்சியால் அசாமில் அமைதி நிலவி வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா
Updated on
1 min read


பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் எடுக்கப்பட்ட முயற்சியால் அசாமில் அமைதி நிலவி வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் கெளஹாத்தியில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும் 9 சட்டக் கல்லூரிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா, அசாம் மக்களின் கலாசாரம் இல்லாமல் இந்தியாவின் கலாசாரம் முழுமையடையாது. கலாசாரம் மற்றும் மொழி ஆகியவற்றை வலுப்படுத்துவதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியா அடையாளப்படுத்தப்படும் என்பதில் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது.

அசாமில் ஒருசில இயக்கங்கள் மூலம் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். சில போராட்டத்தில் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன. அசாமின் அமைதி சீர்குலைந்ததால் முன்னேற்றத்திற்கு தடை ஏற்பட்டது.

ஆனால் மோடி அரசின் முயற்சிகளால் அசாமில் தற்போது அமைதி நிலவிவருகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com