ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கோவை சிறுமி, விழுப்புரம் ஆசிரியை குறித்து பேசிய பிரதமர் மோடி!

'மனதின் குரல்' நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, கோவை சிறுமி காயத்ரி, விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை ஹேமலதா பற்றியும் பேசியுள்ளார். 

News image
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
Updated On :27 டிசம்பர் 2020, 6:34 am

DIN

'மனதின் குரல்' நிகழ்ச்சியின் மூலமாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதில் நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, கோவை சிறுமி காயத்ரி பற்றியும், விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை ஹேமலதா என்பவர் பற்றியும் பேசியுள்ளார். 

'தமிழகத்தின் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஹேமலதா என்பவர் மிகத் தொன்மையான மொழியாம் தமிழைப் பயிற்றுவித்து வருகிறார். கரோனா நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தர ஒரு புதிய வழியை முயற்சித்துள்ளார்.

புத்தகத்தின் அனைத்து அத்தியாயங்களையும் அனிமேஷன் விடியோவாக மாற்றி மாணவர்களுக்கு பென்டிரைவில் கொடுத்துள்ளார். தொலைபேசி வாயிலாகவும் மாணவர்களை வழிநடத்தி வருகிறார். அவருக்கு வாழ்த்துகள். 

இதேபோல இம்மாதிரியான படிப்புகளை கல்வி அமைச்சகத்தின் 'திக்ஷா' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து ஆசிரியர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். 

அதேபோல கோவை சிறுமி காயத்ரி குறித்து, 'மனிதர்களுக்கான சக்கர நாற்காலிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் கோவையைச் சேர்ந்த ஒரு சிறுமி காயத்ரி, தனது தந்தையுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட ஒரு நாய்க்காக சக்கர நாற்காலி ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இந்த உணர்வு உத்வேகம் அளிக்கிறது. மனதில் கருணையும் அன்பும் இருந்தால் மட்டுமே இப்படி ஒருவரால் செய்ய முடியும். அவருக்கு வாழ்த்துகள்' என்றார். 

மேலும், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கட் முரளிப்ரஸாத் நம் நாட்டு மக்களின் உழைப்பும், வியர்வையும் கலந்திருக்கும் உள்ளூர் பொருள்களையே வாங்கப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் மக்கள் அனைவரும் இவ்வாறான உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.