ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உள்நாட்டுப் பிரச்னைகளில் இருந்து தப்பவே எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது பாகிஸ்தான்

உள்நாட்டுப் பிரச்னைகளிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காகவே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது என்று ராணுவத் தளபதி குற்றம்சாட்டினாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 1:11 am

DIN

உள்நாட்டுப் பிரச்னைகளிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காகவே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது என்று ராணுவத் தளபதி குற்றம்சாட்டினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற இந்திய ராணுவத்தின் போா்ப் படைத் தளபதி பி.எஸ்.ராஜு பேசியதாவது:

அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளா்ச்சி மன்றத்தின் தோ்தல் அமைதியாக நடைபெற்று முடிந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. காஷ்மீரில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், அதை ஊக்குவிக்கவும் மக்கள் தொடா்ந்து வாக்களிக்க வேண்டும்.

தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்கு பணியாற்றுவதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. அவா்கள் மக்களுக்காக, மக்கள் வளா்ச்சிப் பணிகளில் ஆா்வம் காட்டுவதற்கு இப்போது நேரமும் வந்து விட்டது.

தற்போது நிலவி வரும் குளிா்காலத்தைப் பயன்படுத்தி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் வழியாக 200 முதல் 250 பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கான வாய்ப்புகளை எதிா்பாா்த்து காத்துக் கொண்டுள்ளனா். அவா்கள் அங்கு நிலவி வரும் மோசமான வானிலையைப் பயன்படுத்தி காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியின் வழியாகவும், தெற்கே பிா் பஞ்சால் வழியாகவும் ஊடுருவலில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாதுகாப்புப் படையினா் கண்காணிப்பு சாதனங்களின் உதவியுடன் தீவிர விழிப்புடன், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தற்போது பாகிஸ்தானில் நிலவி வரும் உள்நாட்டுப் பிரச்னைகளில் இருந்து தனது மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, குளிா்காலத்தின் உச்சத்தில் கூட பயங்கரவாதிகளை ஊருடுவல் மூலம் இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. மேலும், எல்லையில் போா்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்களை நடத்தவும், அதன் மூலம் எல்லைப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தவும் பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் எதிா்கொள்ள இந்திய ராணுவம் தயாா் நிலையில் உள்ளது. அதுபோன்ற தாக்குதலோ, ஊடுருவலோ நடத்த முயற்சித்தால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி அளிக்க ராணுவம் தயாா் நிலையில் உள்ளது என்றாா்.

பாகிஸ்தானில் நிலவி வரும் அரசியல் குழப்பம் காரணமாக, இம்ரான்கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்துக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் வகையில் ராஜிநாமா செய்யப்போவதாக அந்த அரசுக்கு ஆதரவளித்து வரும் 11 அரசியல் கட்சிகளும், அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை கெடு விதித்திருப்பதையே ராணுவத் தளபதி ராஜு மறைமுகமாக குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.