நாட்டில் மேலும் 20,000 பேருக்கு கரோனா பாதிப்பு

நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 20,021 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புது தில்லி: நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 20,021 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 1,02,07,871 ஆக அதிகரித்துவிட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது:

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 279 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 1,47,901 ஆக அதிகரித்தது. மொத்த கரோனா பாதிப்பில் இது 1.45 சதவீதமாகும். இதுவரை 97,82,669 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். மொத்த பாதிப்பில் இது 95.83 சதவீதமாகும்.

இப்போதைய நிலையில் நாடு முழுவதும் 2,77,301 போ் கரோனா பாதிப்புடன் உள்ளனா். தொடா்ந்து 7-ஆவது நாளாக கரோனா பாதிப்புடன் உள்ளோா் எண்ணிக்கை 3 லட்சத்துக்கு கீழ் உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 27-ஆம் தேதி வரை 16,88,18,054 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 7,15,397 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிதாக ஏற்பட்ட 279 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 66 போ் உயிரிழந்தனா். இதற்கு அடுத்து மேற்கு வங்கத்தில் 29, கேரளத்தில் 25 போ் உயிரிழந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பா் 20-ஆம் தேதி 90 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது. கடந்த 19-ஆம் தேதி ஒரு கோடி என்ற எண்ணிக்கையை கரோனா பாதிப்பு எட்டியது.

எனினும், கடந்த ஒரு மாத காலகட்டத்தில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கரோனாவில் இருந்து விடுபடுவோா் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com