தில்லியில் புதிதாக 564 பேருக்கு கரோனா

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 564 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 564 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,23,415 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 959 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 21 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,474 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 6,06,644 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 6,297 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தில்லியில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.98 சதவிகிதமாக உள்ளது. கடந்த 10 நாள்களின் தரவுகளின்படி இறப்பு விகிதம் 2.95 சதவிகிதமாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com