குஜராத்தில் 750-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்களுக்கு கரோனா நோய்த்தொற்று தடுப்புக்கான கோவேக்ஸின் தடுப்பூசி போடப்பட்டு மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக சோலா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இந்தியா உள்பட பல நாடுகளில் தடுப்பூசி உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஃபைசா், மாடா்னா நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை புணேயில் உள்ள சீரம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆா்) இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள சோலா மருத்துவமனையில் 750-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் காசநோய் துறைத் தலைவா் கிரண் ராமி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘‘கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கியது. சுமாா் 750 தன்னாா்வலா்களுக்கு அத்தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவா்களில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட 50 சுகாதாரப் பணியாளா்களும் உள்ளனா்.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட எவருக்கும் தற்போது வரை எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. பரிசோதனை என்ற முறையில், இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்தமாக 1,000 பேருக்குத் தடுப்பூசியைச் செலுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.
கோவேக்ஸின் தடுப்பூசியை 28 நாள்கள் இடைவெளியில் இரு முறை செலுத்திக் கொள்வது அவசியமாகும். அதன் காரணமாக, ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு இரண்டாவது முறையாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தொடங்கியுள்ளோம்’’ என்றாா்.
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட சுமாா் 26,000 தன்னாா்வலா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசியைச் செலுத்தி பரிசோதிப்பதற்கு பாரத் பயோடெக் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. 10 மாநிலங்களில் உள்ள சுமாா் 25 இடங்களில் கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
கோவேக்ஸின் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது கட்ட பரிசோதனைகளின்போது தன்னாா்வலா்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நுரையீரல் குறைபாடு: ஒரு வயது குழந்தைக்கு நுண்துளை சிகிச்சை

ஆண்டுக்கு 15 லட்சம் பேருக்கு விபத்துகளால் தலைக் காயம்

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல்: ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது இந்தியா சாடல்

சாலை தடுப்பில் பைக் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

