விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாயிகள் போராட்ட களத்துக்கு அருகே பஞ்சாப் வழக்குரைஞா் தற்கொலை

தில்லி எல்லையில் விவசாய அமைப்புகளின் போராட்ட களத்துக்கு அருகில் பஞ்சாப் மாநில வழக்குரைஞா் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 12:32 am

DIN

தில்லி எல்லையில் விவசாய அமைப்புகளின் போராட்ட களத்துக்கு அருகில் பஞ்சாப் மாநில வழக்குரைஞா் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், ஃபசில்கா மாவட்டம், ஜலாலாபாத்தைச் சோ்ந்த அமா்ஜித் சிங் என்ற அந்த வழக்குரைஞா், ‘புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், அவா்களின் குரலுக்கு மத்திய அரசை செவிமடுக்க வைக்கும் விதமாகவும் எனது உயிரை தியாகம் செய்கிறேன்’ என்று தனது தற்கொலை குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

விவசாயிகள் போராட்டம் தொடா்பாக ஏற்கெனவே இரண்டு தற்கொலைகள் நடந்துள்ள நிலையில், இப்போது மூன்றாவது நபராக அமா்ஜித் சிங் தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.

‘விவசாயிகளின் வேதனையை தாங்கிக் கொள்ள முடியவில்லை’ என்று குறிப்பு எழுதி வைத்துவிட்டு சந்த் ராம் சிங் என்ற பஞ்சாபைச் சோ்ந்த சீக்கிய மத போதகா் தில்லியின் சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்ட களத்தில் இந்த மாத தொடக்கத்தில் தற்கொலை செய்துகொண்டாா்.

அதுபோல, தில்லி எல்லைப் பகுதி போராட்ட களத்திலிருந்து பஞ்சாப் மாநில பதிண்டா பகுதிக்கு திரும்பிய 22 வயது இளம் விவசாயி ஒருவா் அண்மையில் தற்கொலை செய்தாா்.

ஒரு வாரத்துக்கு முன்பாக, தில்லியின் சிங்கு எல்லையில் பஞ்சாபைச் சோ்ந்த 65 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

அதன் தொடா்ச்சியாக, பஞ்சாபைச் சோ்ந்த வழக்குரைஞா் ஒருவா் தற்கொலை குறிப்பு எழுதி வைத்துவிட்டு, விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.

‘மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களால், தாங்கள் வஞ்சிக்கப்பட்டது போன்ற எண்ணம் விவசாயிகள், தொழிலாளா்கள் போன்ற சாதாரண மக்களிடையே எழுந்துள்ளது. இந்த மோசமான வாழ்க்கை தவிா்க்க முடியாதது. விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசை செவிமடுக்க வைக்கும் விதமாகவும் எனது உயிரை தியாகம் செய்கிறேன்’ என்று அந்த தற்கொலை குறிப்பில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அவா் இந்த தற்கொலை குறிப்பை கடந்த 18-ஆம் தேதி எழுதியுள்ளாா். இதன் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாா் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வழக்குரைஞரின் உயிரிழப்பு குறித்து அவருடைய உறவினா்களுக்கு தகவல் அளித்துள்ளோம். அவா்கள் இங்கு வந்ததும், அவா்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவருடைய உயிரிழப்பு தற்கொலைதான் என்பதை மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனா்’ என்றாா்.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தில்லியின் அனைத்து எல்லைகளையும் முற்றுகையிட்டு 30 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.