பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு: பதிவு செய்யாமல் உரிமை கோரும் பாகிஸ்தான்

பாசுமதி அரிசிக்கான புவிசார் குறியீட்டுக்காக இந்தியாவுடன் பாகிஸ்தான் போராடிவரும் நிலையில், அந்நாட்டில் பாசுமதி பாதுகாக்கப்பட்ட பொருளாகப் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

News image
Updated On :29 டிசம்பர் 2020, 9:35 pm

தினமணி

பாசுமதி அரிசிக்கான புவிசார் குறியீட்டுக்காக இந்தியாவுடன் பாகிஸ்தான் போராடிவரும் நிலையில், அந்நாட்டில் பாசுமதி பாதுகாக்கப்பட்ட பொருளாகப் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
 எந்தவொரு பொருளும் சர்வதேச சந்தையில் பதிவு செய்யப்பட வேண்டுமானால், உள்ளூர் சட்டப்படி அந்தப் பொருள் பாதுகாக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
 ஆனால், பாகிஸ்தானில் புவிசார் குறியீடு மசோதா-2020 நிறைவேற்றப்பட்டாலும் அதற்கான விதிமுறைகள் இன்னமும் வரையறுக்கப்படவில்லை என அந்த நாட்டில் இருந்து வெளியாகும் "டான்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 இது குறித்து அரிசி ஏற்றுமதியாளர் கூறியுள்ளதாவது: புவிசார் குறியீட்டுக்கான சட்டம் இயற்றுமாறு 2000-ஆம் ஆண்டு முதலே அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இறுதியாக கடந்த மார்ச் மாதம் இந்த சட்டம் இயற்றப்பட்டாலும் விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை. இதன் காரணமாக, உலகின் எந்தப் பகுதியிலும் பாகிஸ்தானிய புவிசார் குறியீட்டுடன் பதிவு செய்ய முடியவில்லை என்றார்.
 விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், வர்த்தக அமைச்சகம் அதை விரைவில் அறிவிக்கும் எனவும் அறிவுசார் சொத்து நிறுவன செய்தித் தொடர்பாளர் மீசாக் ஆரிஃப் தெரிவித்தார்.
 பாசுமதி அரிசிக்கு தனி உரிமை கோரி ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்தியா கடந்த செப்டம்பரில் மனு அளித்தது. நறுமணமுள்ள பாசுமதி அரிசியானது இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் உற்பத்தி செய்யப்படுவதாக மனுவில் இந்தியா குறிப்பிட்டிருந்தது.
 இதையடுத்து, விழித்துக் கொண்ட பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர்கள், பாகிஸ்தான் அறிவுசார் சொத்து நிறுவனத்திடம் முறையிட்டனர்.
 இந்த விவகாரம் தொடர்பாக வர்த்தகத்துக்கான பாக். பிரதமரின் ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத் தலைமையில் கடந்த அக்டோபரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, இந்தியாவின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாசுமதி அரிசி இரு நாடுகளின் சிறப்புப் பொருள் என ஐரோப்பிய ஒன்றியத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
 உலகின் பல்வேறு பகுதிகளுக்கு 5 லட்சம் டன் முதல் 7 டன் லட்சம் டன் வரையிலான பாசுமதி அரிசியை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்கிறது. அதில் 2.5 லட்சம் டன் அரிசி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.