/

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறித் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் இன்று அத்துமீறித் தாக்குதல் நடத்தினா். 

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 6:15 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் இன்று அத்துமீறித் தாக்குதல் நடத்தினா். 
ஜம்மு-காஷ்மீரின், ரஜோரி மாவட்டம், நவ் சேரா செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தியும், சிறிய ரக பீரங்கிகள் மூலமாக குண்டுகளை வீசியும் இன்று தாக்குதல் நடத்தினா். 
அவா்களுக்கு இந்திய ராணுவத்தினா் தக்க பதிலடி அளித்தனா். இந்த தாக்குதலில் இந்திய வீரா்கள் காயமடைந்ததாகவோ, பலியானதாகவோ தகவல் வெளியாகவில்லை. 
முன்னதாக கடந்த 24ஆம் தேதி பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ண காதி செக்டரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.