உ.பி.: மது போதையில் 2 மாத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை
உத்தரப்பிரதேசத்தில் மதுபோதையில் இருந்த தந்தை தனது 2 மாத குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.


உத்தரப்பிரதேசத்தில் மதுபோதையில் இருந்த தந்தை தனது 2 மாத குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் காதேர்கர் பகுதியைச் சேர்ந்த தேவேந்தர் என்பவர் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதனிடையே இன்று (டிச.31) மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த அவர், மனைவி ரேணுவின் மடியில் இருந்த இரண்டு மாத குழந்தையை கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.
இதனைதடுக்க முயன்று மனைவி ரேணு கணவருடன் சண்டையிட்டுள்ளார். இதில் இரண்டு குழந்தைகள் மற்றும் ரேணு ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தானா பவான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தேவேந்தரை தேடி வருகின்றனர்.
குடித்து விட்டு வந்தது குறித்து கேள்வி கேட்டதற்கு மகன்களையும், தன்னையும் அடித்ததாக புகார் அளித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த 2 மாத குழந்தை உயிரிழந்தது. தலைமறைவான கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...