இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் வில்லன்கள்: மத்திய பாஜக அமைச்சர் பேச்சு

குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் வில்லன்களாக மாறுவதாக எதிர்ப்பு பாஜக எம்.பி முகம்மது அப்பாஸ் நக்வி கூறுகிறார்.

News image
Updated On :3 பிப்ரவரி 2020, 7:35 am

குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் வில்லன்களாக மாறுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகிறார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக மற்றும் மாணவ அமைப்புகள் சார்பில் போராட்டங்கள், பேரணிகள் நடைபெறுகின்றன. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் நடத்தி வரும் போராட்டத்தை தடுக்க இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.  

இந்நிலையில் இதுகுறித்து பேசிய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, 'குடியுரிமைச் சட்டத்தை வில்லனாக்கும் முயற்சியில் அதற்கு எதிராக போராடுபவர்களே இறுதியில் வில்லன் ஆகிறார்கள் எனத் தெரிவித்தார். 

மேலும், பொய்களின் புதர்களுக்கு பின்னால் அவர்கள் எவ்வளவு காலம் சத்திய மலையை மறைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார். 

அத்துடன், 'குடியுரிமைச் சட்டம் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே தவிர, குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல என குடியரசுத் தலைவரே நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

குடியுரிமைச் சட்டம் இந்திய குடிமக்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே இச்சட்டத்தினை எதிர்ப்பது அரசியலமைப்புக்கு செய்யும் விரோதம்' என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.