தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதையொட்டி, தேர்தல் தேதி வரை குடிசைப் பகுதிகளில் குடியேறுமாறு அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா 250 பாஜக உறுப்பினர்களை அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
70 பேரவைத் தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்நிலையில், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் கட்சிக் கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அடித்தட்டு மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கத்தில் புதிய வியூகத்தை வகுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, 250 பாஜக உறுப்பினர்களை இன்று இரவு முதல் தேர்தல் தேதி வரை தில்லி முழுவதும் உள்ள குடிசைப் பகுதிகளில் குடியேறுமாறு ஜெ.பி. நட்டா அறிவுறுத்தியுள்ளார். எனவே, பாஜக எம்பி-க்கள் இன்று இரவு டென்ட் அமைத்து, குடிசை வாழ் மக்களுடன் இணைந்து அவர்களுடன் இரவு உணவைப் பகிர்ந்து உண்ணப்போவதாகத் தெரிகிறது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலே அடித்தட்டு மக்களின் வாக்குகளைப் பெறுவது. காரணம், அரசாங்க சலுகைகள் மூலம் அடித்தட்டு மக்களின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி பெற்றுள்ளது. இந்த நிதர்சனத்தை உணர்ந்ததன் காரணமாகவே, அடித்தட்டு மக்களின் வாக்குகளைப் பெறுவதில் பாஜக அதிகம் கவனம் செலுத்தியிருப்பதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


