மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

'எங்கள் வெற்றியல்ல; தில்லி மக்களின் வெற்றி' - தொண்டர்கள் மத்தியில் கேஜரிவால் பேச்சு

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :11 பிப்ரவரி 2020, 10:28 am

DIN

தில்லி சட்டப்பேரவைத் தேர்லில் தொடர்ந்து மூன்றாவது முறையாக கிடைத்த வெற்றியை மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் தில்லியில் 3வது முறையாக கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. 

இந்த நிலையில், தில்லி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தொண்டர்கள் மத்தியில் பேசினார். 

அப்போது அவர், 'தில்லி தேர்தல் வெற்றி ஆம் ஆத்மியின் வெற்றி அல்ல; தில்லி மக்களின் வெற்றி. மூன்றாவது முறையாக எங்களுக்கு வெற்றியை கொடுத்த தில்லி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வெற்றியை தில்லி மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம்.

தில்லி மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது. தொடர்ந்து  மக்களுக்காக உழைப்போம். நாட்டில் புதிய வகையான அரசியல் பிறப்பதற்கு தில்லி தேர்தல் முடிவுகள் அடித்தளமாக அமைந்துள்ளன. நாட்டின்  முன்னேற்றத்திற்கான அரசியலை மக்கள் அங்கீகரித்துள்ளனர்' என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.