தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

'இப்படி ஒரு தலைவரைப் பெற்றதை பெருமையாக நினைக்கிறேன்' - மணீஷ் சிசோடியா ட்வீட்

அரவிந்த் கேஜரிவால் தனது தலைவராக இருப்பதில் பெருமிதம்கொள்வதாக தில்லியின் முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏவுமான மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2020, 11:25 am

DIN

அரவிந்த் கேஜரிவால் தனது தலைவராக இருப்பதில் பெருமிதம்கொள்வதாக தில்லியின் முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏவுமான மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

நடந்து முடிந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி 62 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 

தொடர்ந்து மூன்றாவது முறையாக தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பிப்ரவரி 16ஆம் தேதி பதவியேற்க உள்ளார். ராம் லீலா மைதானத்தில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறித்து தில்லியின் முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏவுமான மணீஷ் சிசோடியா, 'அரவிந்த் கேஜரிவால் ஒரு சிறந்த நண்பர், வழிகாட்டி. அவரைப் போன்ற ஒரு தலைவரை பெற்றதில் நான் எப்போதும் பெருமையாகவும் பாக்கியமாகவும் உணர்கிறேன்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சிசோடியா மற்றும் கேஜரிவால் இருவருமே அரசியலுக்கு வருவதற்கு முன்னரே, ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.