ஜம்மு நெடுஞ்சாலையில் லார் மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி
ஜம்மு-காஷ்மீர், சம்பாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.


ஜம்மு-காஷ்மீர், சம்பாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையில் காக்வால் பகுதியில் உள்ள ஸ்வாண்டா மோர் என்ற இடத்தில் இன்று அதிகாலை கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேரும் பலத்த காயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் 5 பேரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்.
இறந்தவர்கள் யார் என்ற அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...