குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடு முழுவதும் வெறுப்பைத் தூண்டுவதற்கு மாணவர்களை பயன்படுத்துவதாக கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' இளம்பெண் அமுல்யா கோஷம் எழுப்பினார். இதையடுத்து, உடனடியாக தேசத் துரோக வழக்கில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவிக்கையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து எதிர்ப்பைத் தூண்ட சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இதில் மாணவர்கள் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றனர். மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். அதேபோன்று தான் தற்போது அமுல்யா பயன்படுத்தப்பட்டுள்ளார்' என்று தெரிவித்தார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, இளம்பெண் அமுல்யாவுக்கு நக்ஸலுடன் தொடர்பு உள்ளது என்றும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


