ஹிமாசலில் இன்று மீண்டும் மிதமான நிலநடுக்கம்
ஹிமாசலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் இன்று காலை மீண்டும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.


ஹிமாசலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் இன்று காலை மீண்டும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 3.2ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதியில் உள்ள சம்பா மாவட்டத்தின் வடகிழக்கு பகுதியில் 5 கிலோமீட்டா் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். இந்தியாவில், பிரிவு 2, 3, 4, 5 என 4 பிரிவுகளாக நிலநடுக்கம் அபாயம் உள்ள பகுதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஹிமாசலப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளன. முன்னதாக கடந்த புதன்கிழமையும் இதே பகுதியிலும் நேற்று குலு மாவட்டத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்க்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...