வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மேற்கு வங்கத்தில் 17 வயது பெண்ணின் எரிந்த உடல் கண்டெடுப்பு

மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு தினாஜ்புர் மாவட்டத்தில் 17 வயது பெண்ணின் எரிந்த உடலை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

News image
Updated On :7 ஜனவரி 2020, 10:06 am

PTI


பலூர்காட்: மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு தினாஜ்புர் மாவட்டத்தில் 17 வயது பெண்ணின் எரிந்த உடலை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

அவர் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி, எரிக்கப்பட்டிருக்கலாம் என்று உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.

தினாஜ்புர் மாவட்டம் குமார்கஞ்ச் பகுதியில் பாலத்துக்குக் கீழே எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், பிரேத பரிசோதனைக்குப் பிறகே அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது குறித்து தெரிவிக்க முடியும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சகோதரர் இது குறித்து பேசுகையில், சகோதரி கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் கடைக்குச் சென்ற போது காணாமல் போனதாகத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.