நிர்பயா வழக்கு: குற்றவாளிகளின் சீராய்வு மனு மீது ஜனவரி 14ல் விசாரணை
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற இரண்டு குற்றவாளிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் ஜனவரி 14ல் விசாரிக்கிறது.


புது தில்லி: நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற இரண்டு குற்றவாளிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் ஜனவரி 14ல் விசாரிக்கிறது.
குற்றவாளிகள் வினய் ஷர்மா (26), முகேஷ் குமார் (32) ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணன், அருண் மிஷ்ரா, ஆர்.எஃப். நாரிமன், ஆர். பானுமதி, அஷோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜனவரி 14ம் தேதி 1.45 மணிக்கு விசாரிக்கிறது.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதன் மூலம், குற்றவாளிகளுக்கு கடைசி மற்றும் இறுதி சட்ட நிவாரணம் கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
வரும் 22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், முகேஷ் குமார் மற்றும் வினய் ஷர்மா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதே சமயம், தூக்கு தண்டனை பெற்ற அக்சய் குமார் சிங் (31), பவன் குப்தா (25) சார்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.
கடந்த 2012-ஆம் ஆண்டில் துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’ கூட்டுப் பாலியல் பலாத்காரம், மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்புடைய வழக்கை விசாரித்த தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமாா் அரோரா, ‘ இந்த வழக்கின் குற்றவாளிகள் முகேஷ் (32), பவன் குப்தா (25), வினய் சா்மா (26), அக்ஷய் குமாா் சிங் (31) ஆகிய நால்வருக்கும் திகாா் சிறையில் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்’ என உத்தரவிட்டாா்.
2012, டிசம்பா் 16 நள்ளிரவில் ஓடும் பேருந்தில் ‘நிா்பயா’ என்ற துணை மருத்துவ மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு பேருந்திலிருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டாா். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த ‘நிா்பயா’, சிங்கப்பூா் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உயிரிழந்தாா். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 போ்களில் ராம் சிங் என்பவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவா் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வழக்கில் தொடா்புடைய மற்றொருவா் சிறாா் பிரிவின் கீழ் வந்ததால், அவா் தொடா்பான வழக்கு சிறாா் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. அந்த வழக்கில் அவா் தண்டனை விதிக்கப்பட்டு கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டாா். அங்கு மூன்றாண்டு வைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...