வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்: திமுக புறக்கணிப்பு?

தில்லியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை.

News image
Updated On :13 ஜனவரி 2020, 10:18 am

DIN


தில்லியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை.

நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தில்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், லோக் தந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் டி. ராஜா ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.

Story image

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் மற்றும் அகமது படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Story image

பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என ஏற்கெனவே அறிவித்தனர். இந்நிலையில், திமுக சார்பிலும் இந்தக் கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை 

ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் இடையே சுமூக உறவு இல்லாதது காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரியின் அறிக்கை மூலம் வெளிபட்டது. இந்தச் சூழலில் திமுக பிரதிநிதிகள் யாரும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காதது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், பல்கலைக்கழக வளாகங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறுகிறது. எனவே, மாணவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.