இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருமணத்துக்கு சென்றவர்கள் கார் விபத்து: 5 பேர் பலி

உத்தரபிரதேசத்தின் ஷாஜகஹான்பூரில் ஒரு கார் மரத்தில் மோதி பள்ளத்தில் விழுந்து திருமண விருந்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

News image
கோப்புப் படம்
Updated On :21 ஜனவரி 2020, 8:26 am

IANS

உத்தரபிரதேசத்தின் ஷாஜகஹான்பூரில் ஒரு கார் மரத்தில் மோதி, பள்ளத்தில் விழுந்து 5 பேர்  உயிரிழந்தனர்.

இந்த விபத்து சதா கிராமத்திற்கு அருகே திங்கள்கிழமை இரவு நடந்தது, மேலும் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் ஷாஜகான்பூரில் உள்ள சாந்திபுரம் காலனியில் வசிப்பவர்கள்.

அந்த 5 பேரும் ஷாஜகான்பூரிலிருந்து பிலிபித்துக்கு ஒரு திருமண நிகழ்வில் கலந்துக் கொள்ளச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கார் ஓட்டுநர் மற்றொரு காரை முந்திச் செல்ல முயன்றபோது, வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார்.

வாகனம் நொறுங்கி, கிட்டத்தட்ட இரும்புக் குவியலாகக் காணப்பட்ட நிலையில், அரும்பாடுபட்டுத்தான் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன.  உடனடியாக பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, தற்போது போலீஸ் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.